• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

ByKalamegam Viswanathan

Feb 7, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை
மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். பிணத்தை கைப்பற்றி சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், சென்னையில் உள்ள மகன் போன் செய்து எடுக்காத நிலையில் அருகில் உள்ளவர்களிடம் போன் செய்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் பிணமாக இருந்தனர். இதனை அடுத்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட இருவரின் பிணத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் .பின்னர் இது சம்பந்தமாக சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்