• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்

Byதரணி

Jan 22, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார் என மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே. பி. ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அதை தொடர்ந்து ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் மாநில செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளைரை தோற்கடிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
அதைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் திமுக ஆதரவு வேட்பாளர்களை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.பா.ஜ.க ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது, அதிமுக.வில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை 2 நாட்களில் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் செய்யும் ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் கொள்ளைக்கும் அங்கீகாரத்தை தேடி கொள்வார்கள். அதிமுகவின் இரண்டு அணியும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து. திமுக.வை தோற்கடிக்க ஒன்றிணைந்து வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது அவசியம். பாஜக இரு அணிகளை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடாது. அவர்கள் கட்சியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. திமுக.வை தோற்கடிக்க அனைத்து வியூகங்களையும் எடுப்போம்.திமுக அரசுக்கு எதிராக மக்கள் உள்ளனர்.அதனால் பாஜக முன்னிலையில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர்.ஓபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார் .அதை நாங்கள் வரவேற்கிறோம் .திமுகவை அழிக்க நினைக்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுடன் சேரலாம்.நாங்கள் போட்டியிட்டால் திமுக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிப்போம்.திமுக கூட்டணி கட்சி வீழ்த்த பாஜகவை மட்டுமே முடியும். ஈரோடு இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாதது அவர்களது தனிப்பட்ட கருத்து. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் தேசிய கட்சியில் எங்கள் கூட்டணியில் தான் உள்ளது.