• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 2, 2023
  1. அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்?
    அமெரிக்கா
  2. ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    சித்ரா அமீன்
  3. ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    ஜோஸ் பட்லர்
  4. சீனா லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் எத்தனை விண்வெளி சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?
    இரண்டு
  5. நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ஓரியன் விண்கலம் எங்கு தரையிறங்கியது?
    பசிபிக் பெருங்கடல்
  6. பாதுகாப்பு தொழில்துறையில் எத்தனை கோடி முதலீட்டுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது?
    11,000
  7. 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
    இராமநாதபுரம்
  8. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்துவதற்காக கொலிஜியம் குழு எத்தனை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது?
    5
  9. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு எந்த நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது?
    கி.பி.13-ம் நூற்றாண்டு
  10. விமான நிலைய ஆணையம் நடத்திய ஆய்வில் 2-வது விமான நிலையம் எங்கு அமையவுள்ளது?
    பரந்தூர்