• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியை அதரிப்பவருக்கு வீடு தர முடியாது …பரபரப்பு விளம்பர பலகை

ByA.Tamilselvan

Dec 29, 2022
திருநெல்வேலியை சேர்ந்தவர் வீடு வாடகைக்கு விடுவதற்கான கண்டிஷனில் எடப்பாடியை ஆதரிப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது என வைத்துள்ள விளம்பர பலகையால் பரபரப்பு .

திருநெல்வேலியை சேர்ந்தவர் திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன். இவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில கண்டிஷன்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வைத்துள்ள பலகையில், “வீடு வாடகைக்கு… குடிக்காரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்” என எழுதப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என கேட்கும்போது, திருநெல்வேலியில் வீடு கேட்டு வரும்போது நான்கு கால்களில் தவழ்ந்து வருவார்கள். வீடு கிடைத்தபின் இந்த வீடு என்னுடையது என்பார்கள் எனக் கூறுகிறார். ஏன் இப்படி எழுதி வைத்துள்ளீர்கள் என கேட்டால், குடி பழக்கம் என்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்லும், வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர். திருப்பத்தூர் போன்ற தமிழ்நாட்டு மாவட்டங்களில்கூட தமிழ் பேசுவோரை கூட இந்தி பேசுவோரும் பிற வடமாநில மொழி பேசுவோரும்தான் அதிகம் உள்ளனர். ஈபிஎஸ் தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு வேலைகளை வடமாநிலத்தவர்களுக்கு கொடுத்தார். தமிழ்மீது பற்றுள்ள நான் அவர் ஆதரவாளர்களுக்கு எப்படி வீடு கொடுப்பது? எனக் கூறுகிறார் திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன்