• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் நள்ளிரவில் சிறப்பு பிராத்தனை…

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள புகழ் மிக்க சி.எஸ்.ஐ தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு பண்டிகை மற்றும் திருவிருந்து வழிபாடு நடைப்பெற்றது.

நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை, நோயாளிகள் குணம்பெறவும், கொரோனா தொற்று நோய் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி கூட்டு திருப்பலி பிரார்த்தனை ரெவரன் இமானுவேல் வேள வேந்தர் தலைமையில் நடைப்பெற்றது.

புகழ்மிக்க இந்த ஆலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தை ஏசு பிறக்கும் நிகழ்ச்சி பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு இயேசு பிறப்பை ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.