• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் 5 இடங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

Byதரணி

Dec 21, 2022

விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அதிமுக சார்பாக நேற்று 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் கழகம் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்டம் முழுவதிலும் பேரூர், நகரம்,ஒன்றிய பகுதிகளில் விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் 5 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலை பள்ளி எதிரில் எம்ஜிஆர் திடலில் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் மேற்கு பகுதி கழகம் சார்பில் திருத்தங்கல் மேலரதவீதி தேவர்சிலை அருகில் மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணக்குமார் தலைமையிலும் சிவகாசி மாநகரில் மேற்கு பகுதி கழகம் சார்பில் ரயில்வே பீட் சாலை காமராஜர் சிலை அருகில் மேற்கு பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையிலும் சிவகாசி கிழக்கு பகுதி கழகம் சார்பில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதி கழக செயலாளர் சாம் (எ) அபினேஷ்வரன் தலைமையிலும் விஸ்வநத்தம் கிராமத்தில் சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் திருத்தங்கல்-2 மண்டலம் மற்றும் விஸ்வநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பீலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம். கே.என்.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரமணா, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் முருகேசன், திருத்தங்கல் நகர அவை தலைவர் கோவில்பிள்ளை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சிமுருகன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராமராஜ்பாண்டியன், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்சிஓ காலனி மாரிமுத்து, சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டியன், சிவகாசி முன்னாள் நகரக் கழக செயலாளர் அசன்பதுருதீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனைச்செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய கழக துணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அமுதா கருப்பசாமி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் மற்றும் மாவட்ட கழக, மாநகர கழக பகுதி கழக ,வட்டக் கழகச் நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.