• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

181 – திரை விமர்சனம்

எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை என்பதுடன் அதிகரித்து வருகின்றன அது சம்பந்தமான புள்ளிவிவரங்கள் அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181.சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி மனித குல வாழ்க்கைக்கு உதவிகரமாக இருப்பதை போன்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தபடுகிறது என்பதை பதிவு செய்திருக்கும் படம் தான் 181 .ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை எழுதுவதற்காக நகர எல்லைக்கு வெளியில் அமைதியான இயற்கை சூழலில் இருக்கும் ஒரு பண்ணைவீட்டுக்குப் போகிறார். கூடவே அவர் மனைவியையும் அழைத்துப் போகிறார். போன இடத்தில் பேய் இருப்பதை இருவரும் தனித்தனியாக உணர்கின்றனர். அங்கிருந்து வெளியேற நினைத்தாலும் முடியவில்லை. இறுதியில் என்னவானது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கிறது படம்.நாயகன் ஜெமினி நாயகிகள் ரீனாகிருஷ்ணன், காவ்யா ஆகியோர் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள் குறிப்பிட்டபண்ணைவீட்டுக்குள் முழுப்படமும் படமாக்கப்பட்டிருந்தாலும் காட்சி அமைப்புகளில் வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத். பேய்ப்படங்களில் இசைக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. அவற்றை உணர்ந்து இசையமைத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷமீல்ஜே.படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள, பேய் பற்றிக் கதை எழுதுவதற்காக பேய் இருக்கும் இடத்துக்குப் போகும் கதாசிரியர் காட்சி,இறுதியில் உண்மை தெரிந்ததும் நாயகனும் நாயகியும் செய்யும் செயல்கள் சுவாரசியமானவை என்பதுடன் யாரும் செய்யதுணியாதவை பேய்கள் என்பவை திரைப்படங்களில் நீதியின் பிரதிநிதிகளாகப் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்திலும் அப்படித்தான்.
பேய் ஏன் பேயானது? என்பதற்கான காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கும் பேய் உணர்வு வருகிறது.
அண்ணா வலிக்குதுன்னா விட்டுடுங்கண்ணா என்று அப்பெண் கதறுவது நாம் நிஜத்தில் கேட்ட கொடூரம். அக்கொடூரத்தைச் செய்தவர்களுக்கு சட்டமும், நீதிமன்றங்களும் எப்படிப்பட்ட தண்டனையை கொடுக்க வேண்டும் என்றுமக்கள் மனதில் நினைத்ததைப் போன்ற தண்டனையைப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இஷாக்.