டிரம்பின் தோல்வியின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர் என்ற முறையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.
இந்த கலவரம் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு 1½ ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் பாராளுமன்ற குழு விசாரித்து வந்தது.இந்த நிலையில் பாராளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிவு
