• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றி
வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலை சுற்றி 500 மீ.சுற்றளவை தடை செய்யப்பட்ட பகுதியாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங் கூறுகையில், அயோத்தி மெகா திட்டம் 2031-ன்படி கோவிலை சுற்றி 500 மீ. சுற்றளவில் வெறும் மத சடங்குகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். ராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த பகுதியில் கட்டிடங்களின் அதிகபட்ச உயரம் 7.5 மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நீர்த்தேக்கங்கள், குளங்கள், வடிகால்கள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் அல்லது வடிகால் ஆதாரங்களின் பாதுகாப்பும் மெகா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய இடங்களில் ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.