• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை வெளியாகும் அவதார் 2 படம் எப்படி இருக்கும்?

ByA.Tamilselvan

Dec 15, 2022

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள அவதார்-2 படம், பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வேற்று கிரகத்தில் வாழும் நாவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நாவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சயின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார்.
ரசிகர்களின் 13 ஆண்டு திரை தாகத்தை தணிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள அவதார் படம், லண்டனில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படக்குழு, திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். படத்தின் புதிய போட்டோக்களும் ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள், ட்விட்டர் முழுவதும் பாசிட்டிவான விமர்சனகளை பதிவிட்டு வருகின்றனர்.சினிமா கலையில் தான் ஒரு மாஸ்டர் என்பதை ஜேம்ஸ்கேமரூன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.