• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Byமதி

Oct 9, 2021

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் பாயும் நாகநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தஞ்சையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையில், தஞ்சை புதிய பேருந்து நிலையம், கரந்தை, பள்ளி அக்ரஹாரம், நாஞ்சிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பெண்ணாடம் உள்ளிட்ட சில பகுதிகளில் பேருந்து நிலையம், கடை வீதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.