• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திரைத்துறை சார்பில் முப்பெரும் விழா ஆலோசனைக்கூட்டம்..!

Byகுமார்

Dec 3, 2022

மதுரையில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா ஆலோசனைக் கூட்டத்தில் விழா பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர்கள் நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக வடுகப்பட்டி செல்வம் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 5ஆம் தேதி காந்தி அருங்காட்சியகத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சாமிகளின் நூற்றாண்டு விழா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 75 வது பொன்விழா மற்றும் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள், திரைப்பட உதவியாளர்கள் நல சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இதற்காக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெகன், வெங்கடேசன் வழக்கறிஞர் மற்றும் தென் மாவட்டங்களை சார்ந்த துணை நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவதற்க்கான ஆலோசனை மற்றும் விழா பொறுப்பாளர்கள் நியமனம் செய்தனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாற்றுத் திறனாளி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவினை வழங்கினார்.