• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முகம் அழகு மற்றும் அம்மை வடு நீங்க

ByMalathi kumanan

Nov 30, 2022
  1. ஆரஞ்சு தோலை எடுத்து படிப்படியாக நறுக்கி நன்றாக காய்ந்த பின் அதனை நைசாக அரைத்து விட்டமின் இ ஆயில் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி வர சருமம் பளபளப்பாக இருக்கும்
  2. முல்தானி மெட்டி சிறிது கஸ்தூரி மஞ்சள் பூலாங்கிழங்கு பொடி கோரைக்கிழங்கு பொடி நன்னாரி வேர் பொடி இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு இதனை பால் விட்டு குழப்பி முகத்தை நன்கு நீரில் கழுவிய பின் துடைத்துவிட்டு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி விட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும் வாரம் இருமுறை இதனை செய்து வந்தால் கரும்புள்ளி முகப்பரு இவைகள் நீங்கும்
  3. முகத்தில் அம்மை வடு தழும்பு நீங்க
  4. பத்து நிமிடங்களில் முகம் பளபளக்க முகப்பரு தொல்லை நீங்க சந்தன பவுடர் அவற்றுடன் சிறிது டூத் பேஸ்ட் கலந்து பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழிவினால் பருக்கள் குணமடையும்
    • கிராம்பு உரசி பருக்கள் மீது தினமும் மூன்று முறை தடவி வந்தால் பருக்கள் காய்ந்து தழும்பில்லாமல் இருக்கும்
    • முகத்தை நன்கு கழுவிய பிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும் இவ்வாறு தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் வரை செய்தால் உங்கள் சருமம் பொலிவடைந்து இருப்பது கண்கூடாக தெரியும்
    • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு அவற்றுடன் சர்க்கரை சோள மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும் காய்ந்தவுடன் மெதுவாக பிரித்து எடுத்தாள் முட்டையுடன் முடியும் எளிதில் வரும் தேவையற்ற இடங்களில் மட்டும் இதனை தடவவும்
    • கருவளையம் போக இட்லி மாவை கண்ணுக்கு கீழ் பூசி 15 நிமிடம் கழித்து ரோஸ் வாட்டரில் கழுவி விடவும் இரண்டு வாரம் இதை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும் மற்றும் உருளைக்கிழங்கு சாறை தினமும் கண்களை சுற்றி தேய்த்தாள் கருவளையம் நீங்கும்
    • திருநீற்றுப்பச்சில இருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணையை தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதை கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்து விடும்