ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது ..கடந்த காலத்தில் கொரோனா தொற்றால் ஆர்.கே.வி சாலையில் இயங்கி வந்த நேதாஜி தினசரி சந்தை தற்போது புதிய பஸ் நிலையம் பின்பு இயங்கி வருகிறது. பழைய இடத்தில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்காக அந்தப் பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடந்து வந்ததாலும் நாங்கள் மாற்று இடத்திற்கு சென்றோம்.இதற்கு முன்பு பழைய இடத்தில் இயங்கி வந்த தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த எங்கள் சங்கத்தின் உண்மையான வியாபாரிகளை அடையாளம் காணப்பட்டு மாநகராட்சி மண்டபத்தில் கடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் 863 கடைகள் முறையான ஆவணங்களில் கையொப்பம் பெற்று வழங்கப்பட்டது. அந்தக் கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது ஆர் கே வி சாலையில் புதிதாக கட்டுமானம் கட்டி அமைக்கப்பட்டுள்ள தினசரி சந்தையில் 290 கடைகள் கட்டி 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. என்று நாளிதழில் மாநகராட்சி அதிகாரி பேட்டி அளித்துள்ளதாக செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்.இச்செய்தி எங்கள் வியாபாரிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் 863 வியாபாரிகளுக்கு வெறும் 290 கடைகள் என்பது எந்த விதத்திலும் சரி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே அரசு எங்கள் 863 வியாபாரிகளுக்கும் கடைகள் அமைத்தும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை, காய்கறிகளை விற்பனை செய்ய மைதானம் அமைத்தும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த மனுவின் குறிப்பிட்டு இருந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
