• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

ByA.Tamilselvan

Nov 18, 2022

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, மா்மநபர் விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தகவலும் மெயிலில் இல்லை.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூ பிரிவு போலிஸார், தமிழக உயா் போலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடைபெறும் நிலையில் தற்போது கூடுதலாக,மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது.