• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் 95 சதவீத நகைகள் மீட்பு – காவல் துணை கமிஷனர் பேட்டி…

BySeenu

Dec 5, 2023

கோவையில் நடந்த பிரபல நகைக்கடை கொள்ளை தொடர்பாக கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,கோவையில் 28ம் தேதி பிரபல நகைகடையில் கொள்ளை போனது.4.8 கிலோ தங்கம், பிளாட்டினம்,வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்டது.கொள்ளையன் விஜய் மீது இரு வழக்குகள் உள்ளன.விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.நேற்று விஜய் மாமியார் யோகராணி என்பவர் தும்பலஹள்ளியில் கைது செய்யபட்டார். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க,வைர நகைகள் மீட்கப்பட்டது.300 கிராம் முதல் 400 கிராம் நகைகள் மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளது.நகைகளை5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு மீட்டு இருக்கின்றனர்.95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது
விஜய் என்பவரை தேடி வருகின்றோம்.3 நாட்களில் பிடித்து விடுவோம்.மொத்தம் 4.8 கிலோ நகைகள் திருடப்பட்டது.சின்ன ஓட்டையை பயன்படுத்தி உள்ளே நுழைந்து இருக்கின்றார். வெளியில் இருந்து யார் உதவி செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றோம்.விஜய் பிடித்தால் மட்டுமே அது தெரிய வரும். 2 அடி ஓட்டை மட்டுமே நகைகடையில் இருந்தது.வெளியில் இருந்து அல்லது ஜெயிலில் யாராவது உதவினார்களா என விசாரிக்கின்றோம் என தெரிவித்தார்.