மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கபின்(33),இவரது நண்பர் மகேஷ் (35)இரு குடும்பத்தினரும் மொத்தம் 9_பேரும் ஒரு சொகுசு வாகனத்தில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர். வேளாங்கண்ணியில்
இரண்டு குடும்பத்தினரும் இரண்டு நாட்கள் தங்கினார்.

நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் அதிகாலை 5_மணி அளவில் சொந்த ஊரின் அருகே உள்ள தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது,கார் ஓட்டுநரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின்
வலதுபுறம் திரும்பியது. அந்த சமயத்தில் நாகர்கோவில் நோக்கி டாரஸ் லாரி வந்துக் கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் டாரஸ் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
டாரஸ் லாரி மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கார் மோதிய வேகத்தில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 9 பேரும் படுகாயமடைந்த தகவல் கிடைத்த,தக்கலை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கார் விபத்து நடந்த இடத்திற்கு வந்ததும் காயமடைந்திருந்த மகேஷ்,இவரது மனைவி அபிஷா(29)இவர்களது குழந்தைகள் மவுசிக்,(9)ரிக்கோஏன்வி(6) உட்பட 9 பேர்களை காரின் இடிபாடுகளில் இருந்து மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர விபத்தில் லாரியை ஓட்டிவந்த கேரள மாநிலம் காட்டாக்கடையை சேர்ந்த ஓட்டுநர் விமல் குறிச்சி(36) எவ்விதமான காயமும் இன்றி உயிர். தப்பினார்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சில மணிநேரம் தடைபட்டது. சொகுசு வாகனத்தை ஓட்டிய கபின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.