• Sat. Apr 20th, 2024

குஜராத்தில் விபத்தில் உயிரிழந்த 9 பேர்
குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம்

குஜராத் விபத்தில் உயிரிழந்தவர்களின் 9பேர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நவ்சாரியில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *