மதுரை வலையன் குளம் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்பு டிரம்ஸ் வாசிக்கும் வாலிபரை கைகளால் தாக்கி கொலை செய்த வழக்கில் 9 பேரை பெருங்குடி போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் 8 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர். முனியசாமி மகன் கார்திக்(வயது 26) குசவன் குண்டு. பாண்டி முருகன் (வயது 22) குசவன் குண்டு
இந்திரஜித் (வயது 28) குசவன் குண்டு இவர்கள் மூவரும் சகோதரர்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோங் குண்டு பகுதிக்கு சென்ற அஜயை கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து நேற்று காலை மலையன்குளம் பகுதிக்கு வந்த கார்த்திகை அஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. எடுத்து கார்த்திக் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வந்து வலையங்குளம் பகுதியில் அஜய் தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியானார்.
மேலும் கார்திக்கின் நண்பர்கள் முத்துப்பாண்டி (வயது 24) ஹரிராகவன் (வயது 22)
பிரவின்குமார் (20) விஷ்னு (22) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்
மேலும் தலைமறைவாக உள்ள பாண்டி (வயது 26) பெருங்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.