• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 7வது தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாட்டம்.

ByKalamegam Viswanathan

Dec 31, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனை முன்பு,  7வது தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது.
முனிவர் அகத்தியரின் பிறந்தநாளான மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாளான இன்று,  தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை கொண்டாடும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அகத்தியர் சிலை முன்பு, இயற்கையான காய்கனிகள்,  பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் வழிபட்டனர். இவ்விழாவில் இயற்கை காய்கனிகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.