• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

78வது சுதந்திர தினம் – தேச தலைவர்களின் வேடமணிந்து 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த குழந்தைகள்…

BySeenu

Aug 12, 2024

கோவையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேச தலைவர்களின் வேடமணிந்து குழந்தைகள் இடைவிடாமல் 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடும் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த தேச தலைவர்களை போற்றும் விதமாக குழந்தைகளின் தற்காப்பு கலை குறித்த சாதனை நிகழ்வு கோவை குரும்பபாளையம் பகுதியில் நடைபெற்றது.

இதில் முல்லை தற்காப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 18 குழந்தைகள் ,மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வ.உ.சி உள்ளிட்ட 18 தேச தலைவர்களின் வேடம் அணிந்தபடி ஒரே இடத்தில்,ஒற்றை கம்பு சிலம்பம்,இரட்டை கம்பு சிலம்பம் ,வால் கேடயம்,சுருள் வால்,வால் வீச்சு உள்ளிட்டவையினை 78 நிமிடம் இடைவிடாமல் சுழற்றி சாதனை படைத்துள்ளனர்.

குழந்தைகளின் இந்த சாதனை நிகழ்வு ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.தொடர்ந்து குழந்தைகளுக்கு புத்தகத்தின் வேட்பாளர் பிரகாஷ் ராஜ் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.ஒரே இடத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை தேச தலைவர்கள் சுழற்றியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.