காரைக்கால் மாவட்டத்தில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா ஐபிஎஸ், துணை மாவட்ட ஆட்சியர் பூஜா ஐஏஎஸ், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அரசு திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு அரசு துறையினரின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் ரவிபிரகாஷ், துணை மாவட்ட ஆட்சியர் பூஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா, ஆகியோர் சமாதான புறாக்களை பறக்க விட்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






