• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனை..,

BySeenu

Mar 2, 2026

கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே குறைந்து வரும் உடல் உழைப்பை மீட்டெடுக்கும் விதமாகவும்,யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் கோவை சரவணம்பட்டி பகுதியில் பிரம்மாண்ட விழிப்புணர்வு சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 4 வயது முதல் 40 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று, யோகாவில் சவாலானதாக கருதப்படும் ‘சதுஷ்கோணாசனா’ யோகாசனத்தை தொடர்ந்து 23 நிமிடங்கள் செய்து அசத்தினர்.

இவர்களின் இந்த முயற்சி ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது . தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இன்றைய மாணவர்களுக்குத் தேவையான மன ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்கவும், செல்போன் மற்றும் கணினி பயன்பாட்டால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்கவும் யோகா சிறந்த வழி என்பதை உணர்த்துவதே இந்த சாதனையின் முக்கிய நோக்கம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.