கிழக்கு கடற்கரை பகுதியான குமரி மேல மணக்குடி முதல், சென்னை ராயபுரம் வரையிலான கடற்பரப்பில் 61_நாட்கள் அமலில் இருந்த மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜுன் 14_தேதி அன்று முடிவுற்ற நிலையில் அடுத்த நாள் 15_ம்தேதி ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இன்று அதிகாலையில் கீழ் வானம் செவ்வக நிறத்தில் சூரிய ஒளி கீற்றுகள் கடலில் இருந்து மேல் எழும்பி வந்த அந்த அதிகாலை நேரத்தில்.

கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 60_ நாட்கள் கட்டப்பட்டிருந்த,350_க்கும் அதிகமான படகுகள். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தோற்றத்தில். கடலில் எழுப்பி வரும் வெள்ளலை கூட்டத்தில் துள்ளி பாயும் தோற்றத்தில் மீன் கூட்டங்கள் இருக்கும் பகுதிகளை நோக்கி சீறி பாய்ந்தது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை
ரூ.5000.00 த்தை, இந்த ஆண்டு ரூ.8000.00 மாக் உயர்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்களின் மகிழ்ச்சி உடன் நன்றியையும் தெரிவித்தார்கள்.

மீன்பிடி தடைகாலத்தில் உயர்ந்த மீன் விலை இனி குறையும் என்ற கருத்தை சிறிய நிலை மீன் விற்பனையாளர்கள் முதல் பெரிய வியாபாரிகள் வரை தெரிவித்தனர்.
இன்று மாலை கடலில் மீன்பிடித்து திரும்பி வரும் படகுகள் சுமந்து வரும் மீன்களின் வகைகளின் காட்சியை காண கரையில் இருக்கும் வியாபாரிகளின் எதிர் பார்ப்பில்.