• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் 60வது மலர் காட்சி – நடவு பணி துவக்கம்

கொடைக்கானலில் வரும் 60வது மலர் காட்சிக்காக முதற்கட்ட நடவு பணி துவக்கம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி வருடம் தோறும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி வருடம் தோறும் நடத்தப்படுவது வழக்கம் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்களை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அலைமோதும். அதன்படி வருகின்ற ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள கோடை விழாவில் 60வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் தயாராகி வருகிறது .கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய செடிகள் நடுவும் பணி நேற்று முதல் தொடங்கியது இப்பணியை தோட்டக்கலைத் துறை சார்பாக தொடங்கி வைத்தனர்.


ஒரு லட்சம் செடிகள் முதற்கட்டமாக பிரையண்ட் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டு சால்வியா ,டெல்பினியா, பிங்க் அஷ்டர்,ல்லியம், டெய்ஸி, அஸ்ட்ரோ மெரியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நாற்றுகளை 1200 மலர் படுகைகளில் பூங்கா ஊழியர்கள் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ஒரு வாரத்திற்குள் இந்த பணி நிறைவு பெறுகிறது. தற்போது நடவு செய்யும் மலர் நாற்றுக்களில் இருந்து வரும் பூக்கள் ஏப்ரல் மே மாதங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.