போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் இருந்து 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தமுள்ள 53 பேருந்துகளில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் மாற்று ஏற்பாடாக ஓய்வு பெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பணியாளர்களை கொண்டும் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டும் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் சிரமங்களை குறைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கம்..!








