தேனி மாவட்டம் முழுவதும் 1.1.2011 க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உதவி இயக்குனர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டி இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.8.2024 முதல் 31.1. 2025 வரை 6 மாத கால அவகாசம் வழங்கி நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மழையிடப் பகுதிகளில் அமையும் பட்சத்தில் 18.2.2020 குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்று
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தேனி மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.