அரியலூர் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட, திருமானூர் ஒன்றியம்
வாரணவாசி, பூண்டி, பளிங்கா நத்தம், குலமாணிக்கம், தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தொகுதி மேம்பாட்டு திட்டநிதியின் கீழ் ரூ 35.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட
5 அரங்க மேடைகள், மற்றும் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகப்பு நுழைவு வாயில் என 6 திட்ட பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்களுக்கு அரியலூர் மதிமுக மாவட்டச் செயலாளர் க. இராமநாதன் முன்னிலை வகிக்க, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலைமை வகித்து, வாரணவாசி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கமேடை திறக்கும் பணி (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26 – ரூ.7.0 இலட்சம்), கீழப்பழூவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகப்பு நுழைவு வாயில் திறக்கும் பணி (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26 – ரூ.5.0 இலட்சம்),பூண்டி கிராமத் தில் அரங்கமேடை திறக்கும் பணி (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 – ரூ.7.0 இலட்சம்), பளிங்காநத்தம் கிராமத்தில் அரங்கமேடை திறக்கும் பணி (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 – ரூ.7.0 இலட்சம்), தூத்தூர் அரசு மேல்நிலை ப்பள்ளியில் அரங்கமேடை திறக்கும் பணி(சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 – ரூ.7.0 இலட்சம்), குலமாணிக்கம் RC மேல்நிலைப் பள்ளியில் அரங்கமேடை திறக்கும் பணி (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-26 – ரூ.7.5 இலட்சம்) உள்ளிட்ட திட்ட பணிகளை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்திகழ்வில் திருமானூர் மேற்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் அசோக சக்கரவர்த்தி, அரியலூர் ஒன்றிய மதிமுக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் பி.சங்கர், திருமானூர்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யா மொழி,அமுதா,ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.










