மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு இறுதி மரியாதை அஞ்சலியும், மறைந்த தோழர் தா.பாண்டியன் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தங்கமலை தலைமையில் அனைத்து காட்சியின் சார்பிலும் அஞ்சலி புகழஞ்சலி இரு தலைவர்களுக்கும் செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏவி அழகிரிசாமி அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக மாவட்ட நிர்வாகி அசோகன், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் சார்பில் ஐ.ராஜா, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, விசிக மாவட்ட தலைவர் பழனிசாமி, பொறியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் அறிவழகன், லெனின் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமர்,செவிலியர் சங்கத்தின் மாநில தலைவி நிர்மலா, சிபிஐ பொருளாளர் ராமர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விருமாண்டி, முன்னாள் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் பொதுமக்கள், பல்வேறு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டுமலர்கள் வைத்து வீர வணக்கத்தையும், செவ்வணக்கத்தையும் செலுத்தினர்.







