• Thu. May 2nd, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தின விழா

ByN.Ravi

Mar 11, 2024

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் இன்று (11-3-2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழா
இனிதே துவங்கப்பட்டது. கல்லூரி பஜனைக் குழு மாணவர்கள், தேசிய ஒருமைப்பாட்டு பாடலை பாடினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் பற்றி கல்லூரியின் மூத்த பேராசிரியர் முனைவர் காளியப்பன் உரையாற்றினார். விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர். அகதர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சதிஷ்பாபு, மேனாள் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி, மேனாள் பேராசிரியர்கள் முனைவர் நாட்டுத்துறை, முனைவர் வெங்கடசுப்பு, முனைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரி ஆண்டறிக்கையை, வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டதின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர் பாண்டி கல்லூரி நாள் சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார். துறை சார்ந்த பாடப்பிரிவுகள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு சேவை சார்ந்த கல்லூரி குழுவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டதின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின்  முதன்மையர் மற்றும் தேர்வுக்கட்டுபாளர் முனைவர் ஜெயசங்கர் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை, சமஸ்கிருதத் துறைத் தலைவர் முனைவர் ஶ்ரீதர்
சுவாமிநாதன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *