ராஜபாளையம் தென்காசி சாலையில் சொக்கர் கோயில் அருகே தனியார் வங்கி உள்ளது இந்த வங்கியில் .ஆசிரியராக பணிபுரியக்கூடிய குமரேசன் என்ற குமார்
56 பவுன் நகையை கொண்டு சென்று அடகு வைக்க சென்றுள்ளார்.

நகையே சோதனை செய்து பார்த்த போது போலி நகை என கண்டறிந்த வங்கி நகை மதிப்பீட்டாளர் தனியார் வங்கி மேலாளர் பாப்பாத்தி என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து தனியார் வங்கி மேலாளர் பாப்பாத்தி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் உட்பட்ட போலீசார் போலி நகையை அடகு வைக்க முயன்ற குமரேசன் என்ற குமாரை பிடித்து விசாரணை செய்த பொழுது இவர்கள் ஏற்கனவே

ராஜபாளையம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் சம்பந்தபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் 56 பவுன் நகை அடகு வைத்து 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியதும் கூடுதலாக பத்து லட்ச ரூபாய் பணம் வாங்க வேண்டும் என்று கூற்று வங்கியில் வைக்கப்பட்ட நகையை வங்கி செயலாளர் சண்முகநாதன் உதவியுடன் எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலி நகையை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து இந்த குற்றச்சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்று விசாரணை செய்ததில்,

மயிலாடுதுறை வெங்கடேஸ்வர் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சதீஷ்குமார் வயது 48 ராஜபாளையம் சுதர்சன் கார்டன் பகுதியை சேர்ந்த கோபாலு சாமி மகன் பாலகிருஷ்ணன் வயது 43 அருப்புக்கோட்டை வெள்ளைச்சாமி மகன்
சோனைமுத்து வயது 42 ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோடு வெங்கடசாமி மகன் குமரேசன் என்ற குமார் வயது 58 ஆசிரியர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சேர்ந்த இருளாண்டி மகன் சண்முகநாதன் வயது 59 வங்கி செயலாளர் ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த போலி நகை வழக்கில் நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




