• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செங்கையில் வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5சதவீதம் தள்ளுபடி

Byவிஷா

Apr 3, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழகத்தின் மக்களவைத் தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்.19-ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று 100சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறு ஏப்.19-ம் தேதி வாக்காளர்கள் வாக்கு அளித்துவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப். 20-ம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இதற்கு செங்கல்பட்டு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் 100சதவீதம் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.