புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத்து அசத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அண்டக்குளத்தில் 24 ஆண்டுகளாக செயல்படும் விஎஸ்ஏ என்ற தனியார் பள்ளி சார்பில் லிங்கன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் அப்பள்ளியை சேர்ந்த நான்கு வயது முதல் 8 வயதுடைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளின் சாதனை நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

அப்போது பள்ளியில் படிக்கும் சபிக்ஷா என்ற நான்கு வயது மாணவி 247 தமிழ் எழுத்துக்களை 50 வினாடிகளில் ஒப்பயிற்று பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். அதேபோல் அதே பள்ளியில் படிக்கும் விஷ்வா என்ற ஆறு வயது மாணவன் பல்வேறு நாடுகளின் பெயர்களை ஆங்கில எழுத்துக்களின் தலைகீழ் வரிசையாக 20 வினாடிகள் ஒப்பிவித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் ஆறு வயது மாணவி நிகிதா ஸ்ரீ ஹிந்தியில் எண்களை ஒன்று முதல் 100 வரை 31 வினாடிகளில் ஒட்டி விட்டு புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கனிகா ஸ்ரீ வருக எண்களை ஒன்று முதல் 50 எண்கள் வரை எந்த எண்ணை கேட்டாலும் அதன் வர்க்கத்தை ஒரு வினாடிக்குள் தெரிவித்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல் பள்ளியில் படிக்கும் எட்டு வயதுடைய ஐஃபிரா என்ற மாணவி ஆயக்கலைகள் 64 மற்றும் அதன் விளக்கங்களோடு சேர்த்து மொத்தம் 128 ஐயும் 59 வினாடிகளில் ஒட்டி வைத்து புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும் இந்த சாதனையைப் படிந்த ஐந்து மாணவ மாணவிகளையும் அங்கு கூடி இருந்த ஏராளமானோர் கண்டு வியந்தனர். மேலும் ஒவ்வொரு சாதனையையும் மாணவர்கள் புரியும் போது, அனைவரும் கைத்தட்டி தங்களது பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.