புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 13 துறை அதிகாரிகளிடம் 46 வகையான கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும் மண்டல அலுவலரும மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு அதிகாரியுமான R.ரேவதி இலுப்பூர் வட்டாட்சியர் சக்திவேல் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சதீஷ் துணை வட்டாட்சியர் சரவணன் பேரூராட்சி செயல் அலுவலர் கு.சின்னசாமி ஆகியோர் கண்காணிப்பில் இந்த முகாம் நடைபெற்றது
இம் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி தலைவர் V.சகுந்தலா துணைத் தலைவர் E.செந்தில்ராஜா பேரூர் கழகச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது