• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மகா கும்பமேளாவில் 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்

ByP.Kavitha Kumar

Feb 12, 2025

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வு ஜன.12-ம் தேதி தொடங்கி பிப். 26-ம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வில் பொதுமக்கள், சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

இதையடுத்து கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வந்துள்ளனர். இதனால் நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இதுவரை 46.25 மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகி பவுர்ணமியான இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.