• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 459வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

Byகுமார்

Jan 18, 2022

மாமன்னர் திருமலை நாயக்கரின் 459 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மன்னர் திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது..,

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் எம்.எல் ஏ, எம்.பி யாரும் திருமலை நாயக்கருக்கு மரியாதையை செலுத்த வருவதில்லை. இந்த செயல் மன வருத்தத்தை தருகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் திருமலை நாயக்கருக்கு இப்படி ஒரு விழா ஏற்பாடு செய்ய அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமுதாய ரீதியாக இல்லாமல் பொதுவாக அரசியல் துவங்கபடும் என்று பேசினார்.