திருப்பரங்குன்றம் கோட்டை தெரு , பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டது. மாலை 6 மணி வரை விடுதலையாகததால் பாஜக மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம்,மாரி செல்வராஜ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் திருநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

சாலை மறியல் செய்த பாஜகவினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலைந்து செல்லாததால் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் மாணவர் மாவட்ட தலைவர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட 31 பேரும் 14 பெண்கள் உட்பட மொத்தம் 45 பேர் திருநகர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.




