• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மழை வெள்ளத்தால் வங்கிப் பணம் 400 கோடி ரூபாய் சேதம்..!

Byவிஷா

Nov 2, 2023

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் வங்கியில் இருந்த 400 கோடி ரூபாய் ரொக்க பணம் தண்ணீரில் மூழ்கி வீணாகியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகப்பூரில் உள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாக்பூரில் ஆற்றங்கரை அருகில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியானது வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவில் சேதமடைந்துள்ளது. தொலை தொடர்பு வயர்கள் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் ஆகியவை சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ரொக்க கையிருப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.400 கோடி தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.
இதனை அறிந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர். பின்பு, சேதமான ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து அதற்கான மாற்று ரூபாய் நோட்டுகளை வழங்கினர். மேலும், வெள்ளத்தால் ரூபாய் நோட்டுகள் இழப்பு ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.