• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 40 பவுன் நகை -ரூ20 லட்சம் கொள்ளை

Byகுமார்

Jul 4, 2022

மதுரை வசந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து 40 பவுன் தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை; போலீசார் விசாரணை.
மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் (வயது 55) என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்திவருகிறார். இவர் கடந்த ஜூலை 2ம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார். அதன் பின்னர் அவர் நேற்றிரவு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் வீட்டின் உள்ள இருந்த லாக்கர் திறக்கப்பட்டு சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.