விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி. எஸ். ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வளக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அதில் நாற்பது மாணவர்கள் சென்னையில் உள்ள டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் வேல்முருகன் பணி நியமன ஆணை வழங்கினார்.

பின்னர் கல்லூரியில் இருந்து மாணவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றார் மாணவர்களை வழி அனப்பும் நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி, முதல்வர் ஸ்ரீதர், ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.