கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மர கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பல லட்ச ரூபாய் மரங்களை கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் -வனத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து மதுரை மற்றும் திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டதே.

இதில் அதிகளவு மரங்கள் அனுமதியில்லாமல் வெட்டி கடத்தப்பட்டது சம்பந்தமாக
மன்னவனூர் வனச்சரகர் தெருநிறைச்செல்வன் மற்றும் இரண்டு
வனவர்கள், கார்டு உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




