• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறின உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம்

ByT. Vinoth Narayanan

Mar 27, 2025

நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறியதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழக அரசின் அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998 ஆம் ஆண்டு சட்டத்தின் வகை முறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகள் மீது தமிழகஅரசு, அச்சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்து வந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.

(1) சென்னை பெருநகர மாநகராட்சி.189-வது வார்டு உறுப்பினர், .வ.பாபு,

(2) சென்னை பெருநகர மாநகராட்சி. 5-வது வார்டு உறுப்பினர், கே.பி.சொக்கலிங்கம்,

(3) தாம்பரம் மாநகராட்சி.40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர் ச.ஜெயபிரதீப்,

(4) உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் (11-வது வார்டு உறுப்பினர்) க.சகுந்தலா ஆகியோர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்செய்தியை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 வெளியிட்டுள்ளார்.