• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் உபயோக படுத்தும் கழிவறையில், ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள 4 தங்க உருண்டைகள்…

ByKalamegam Viswanathan

Oct 12, 2023

மதுரை விமான நிலைய சுங்க இலக்கா-வினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்று காலை 1030 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி வெளியே செல்லும் வழியில் கழிவறை ஒன்று உள்ளது இதனை விமான நிலையத்தின் உட்பகுதியில் விமானம் ஏறும் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கு பயணிகளும் பயன்படுத்துவர்.

இதே போல் இன்று மதுரையில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளும் இதே பகுதியில் உபயோகப்படுத்தும் கழிவறை உள்ளது உள்ளது. .

பகல் 1மணி அளவில் கழிவறை பகுதிகளில் ரோந்து சென்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் கழிவறையில் நான்கு உருண்டைகள் கிடப்பதாக மத்திய சுங்க இயலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மத்திய சுங்க இலாக்காவினர் சோதனை செய்து பார்த்தபோது நாலு உருண்டைகள் கழிவறையில் கிடந்தன .அவற்றை கைப்பற்றி சோதனை செய்து பார்த்ததில் மேலே கலர் வண்ணமும் உள்ளே தங்கமும் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கைப்பட்ட கைப்பற்றப்பட்ட தங்கத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஆய்வு செய்யும் பணிகளில் சுங்க இலாகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதமும் இதே போல் கழிவறை பகுதிகளில் 2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதே போல் இன்று முறையும் ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோ எடையில் நான்கு தங்க உருண்டைகள் கிடப்பதை சுங்க இலா காவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தங்க உருண்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் சங்க இலக்கணம் அவருக்கு பயந்து கழிவறையில் விடப்பட்டதா மற்றும் பயணிகள் நடமாட்டத்தை சிசிடிவி காட்சி மூலம் கண்காணித்து வருகின்றனர்.