• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 4 பேர் கைது

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

சோழவந்தான் ரயில் நிலையத்தில் 2 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 3 பெண்கள் உட்பட்ட 4 பேர் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்ற புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் மற்றும் கஞ்சா பொருட்கள் ரயில் மற்றும் பஸ்களில் கொண்டு வருகிறார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதே போல் இன்று காலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் போலீசார் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மைசூர் தூத்துக்குடி ரயில் வந்து நின்றவுடன் ரயிலில் ஆய்வு செய்தனர். அப்பொழுது சுமார் 95 கிலோ மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட புகையிலைபாக்கெட்டுகள் சுமார் 4 மூட்டைகள் பறிமுதல் செய்தனர். இதை கொண்டு வந்த மதுரையைச் சேர்ந்த முக்குரான் வயது 71 மற்றும் மூன்று பெண்கள் வள்ளி மயில் உமா அழகம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.