மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் காவல்துறை நடத்திய வாகன சோதனையின் போது, கன்டெய்னர் வேனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஆந்திராவில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கோயம்புத்துரை சேர்ந்த பிரேம்குமார், மதுரையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, விஜயகுமார், திருச்சி தீபக் ஆகியோரை கைது செய்து மொத்தமாக 150கிலோ கஞ்சா, 6செல்போன், கன்டெய்னர் வேன் பறிமுதல் செய்து கரிமேடு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.








