• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

3 ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா..,

ByK Kaliraj

May 10, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கவின் கலா மழலையர் பள்ளி
மூன்றாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மழலையர்களுக்கான தனித்திறன் நடனத்தோடு தொடங்கி பட்டமளிப்பு விழா அரங்கேறியது.

தமிழர் முறைப் படி ஒரு பட்டம் தமிழர் பாரம்பரிய முறைப்படி
கெட்டி மேளம் முழங்க, பல்லாக்கில் ஊர்வலத்தில் அட்சதை பூக்களோடு பட்டம் , பரிவட்டம், செங்கோல் வழங்கி சிம்மாசனத்தில் அமர வைத்து அருமையாக
மழலையர்களுக்கு கௌரவம்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி மாநகராட்சி மேயர் . சங்கீதா இன்பம் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சசிகலா வைரமணி, வேணி வைரப்பிரகாஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற SBI வங்கி மேலாளர் சந்திரராஜன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் சந்திரபோஸ், பல குரல் மன்னன் மருதநாயகம், அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் செல்வன். சதீஷ்குமார் ஆகியோ் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மாரீஸ்வரி செய்திருந்தார்.