விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின் முறைகள் ஒருங்கிணைந்த மாநாடு.

தமிழ்நாடு நாடார் பேரவை மாநில துணைத்தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சி விருதுநகர் மாவட்ட அமைப்புச் செயலாளர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி விருதுநகர் மாவட்ட தலைவர் R.V. குமார் முன்னிலை வகித்தார் இந்த மாநாட்டில் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி அடிப்படையில் மாதம் ஒரு முறை மின்கட்டன கணக்கீடு செய்ய வேண்டும் . நகை கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும்.
கேரளாவில் ஓடும் பம்பை நதியின் உபரி நீரையும் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக குடந்தை வத்திராயிருப்பு தாலுகா கிழவன் கோயிலில் அணைக்கட்டடி விருதுநகர் ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விவசாயிகளுக்கு பாசனத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜ் சிறப்புரையாற்றினார். பேசும் பொழுது தமிழகத்தில் நாடார் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர் அந்த அடிப்டையில் கணக்கெடுத்து பார்த்தால் 36 எம்எல்ஏ சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு கட்சியும் 36 சீட் வழங்கவில்லை நாம் தொழில் வளத்தில் வளர்ந்துள்ளோம். ஆனால் அரசியலில் நாம் இன்னும் பின்தங்கி தான் உள்ளோம்.
அதற்கு தேர்தல் காலங்களில் நாம் வெளியூர் சென்று விடுகிறோம் தேர்தல் காலத்தில் வாக்களிப்பது இல்லை என நாடார் சமுதாயத்தினர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதை முறியடித்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தார். வருகின்ற காலங்களில் நம் சமுதாயத்தினர் மீது யார் அக்கறையுடன் செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
இதை தொடர்ந்து பேசிய பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபால் பேசும் போது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் நம் நாடார் சமுதாயம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அரசியலில் நாம் வளர்ச்சி பெறவில்லை. நம் சமுதாயத்திற்கு காமராஜருக்கு அடுத்து முதலமைச்சர் ஆகவோ பெரிய பதவிகள் யாரும் வரவில்லை. அதிமுகவில் மஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருந்தார். இதுபோன்று பெயர் சொல்லும் அளவில் ஒரு சிலர் தான் உள்ளனர்.
நாம் அரசியலில் கவனம் செலுத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதற்கு நாம் சமுதாயம் ஒவ்வொரு அமைப்பு பிரிந்து இருக்கின்றோம் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாம் வலுவான சமுதாயம் என தெரியப்படுத்த வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.
முன்னதாக மாநாட்டில் 7தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டு முடிவில் ஜோசப் ஆரோக்கியம் நன்றி உரையாற்றினார்.