• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா..,

BySeenu

Mar 19, 2026

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஆரி அர்ஜுனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதில் பேசிய அவர் தோல்விகள் நம்மை வெற்றியாளராக்கும். அவமானங்கள்தான் நம்மை சாதனையாளராக்கும். அதனால் உங்களுக்கு நேரும் அவமானங்களை வென்று காட்டுங்கள். கல்வியோடு மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் சம்பாதிக்கவும் முறையாக முதலீடு செய்து பொருளாதாரத்தை நிர்வகிக்கும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரும் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அமெரிக்காவின் டிஸ்கௌண்ட் டைர் நிறுவனத்தின் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் பிரிவின் துணைமேலாளர் திவ்யா கனகராஜ் பேசுகையில் பெண்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்லூரிக்குப் பெரும்பங்கு இருப்பதாகக் கூறி, மற்றவர்களோடு ஆக்கப்பூர்வமான நட்புறவு பேணுதல், நம் வெற்றிக்குத் துணைநிற்கும் உந்துசக்திகளை மதித்தல், நம்முடைய பலவிதத் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற பண்புகள் நம்மை மேம்படுத்த உதவும் என்றதோடு, வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முன்னதாகக் கடந்த கல்வியாண்டில் கல்லூரி பெற்ற சிறப்புகளையும் மாணவிகளின் சாதனைகளையும் உள்ளடக்கிய ஆண்டறிக்கையைக் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா வாசித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் செயலருமான ராம்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பரிசுகளும் பெஸ்ட் அவுட்கோயிங் விருதுகள் வழங்கப்பட்டன.