கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்க 3,000 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
தென்மாநிலம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நாளை முதல் 21″ஆம் தேதி வரை நடக்கிறது

மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 1:40 மணிக்கு துவக்கி வைக்கிறார்.
முன்னதாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானத்தில் பிற்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் 1:40 மணிக்கு கொடிசியா வளாகம் வந்தடைகிறார்.
1:45 மணி முதல் 3:15 மணி வரை மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நிகழ்ச்சி முடிந்து 3:25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
3:30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

விமான நிலையம் பார்க்கிங் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6:00 மணி வரை வாகனங்களில் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நாளை பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையம் சாலைக்குச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவைக்கு வரும் மோடிக்கு தமிழக பா.ஜ.க வினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.






; ?>)
; ?>)
; ?>)
