பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.*
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் வழக்கறிஞர் அருளின் சகோதரி மகன் சதீஷ், கொலையாளிகள் தப்பிச் செல்ல பொலிரோ ஜீப் ஏற்பாடு செய்து கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.*
அத்துடன் தலைமறைவாக உள்ள வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் தோழியுமான புளியந்தோப்பு அஞ்சலையை போலீசார் தேடி வருகின்றனர்.